இலங்கையில் Gatehouse விருதுகள் (UK) இன் 7வது ஆண்டு பட்டமளிப்பு விழா ஏப்ரல் 12, 2025 அன்று பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரமாண்டமாக நடைபெற்றது.
இன் நிகழ்வை ஏற்பாடு செய்து தலைமை தாங்கியிருந்தார் UK இன் Gatehouse விருதின் இலங்கை இயக்குனரும் ccas கல்லூரியின் நிறுவுனரும் ஆகிய திரு. நஜிமுதீன் சைனுலாப்தீன் அவர்கள்
இன் நிகழ்வில் நாடு முழுவதிலும் உள்ள பயிற்சி நிலையங்கள் மூலம் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி,செவிலியர், தகவல் தொழில்நுட்பம், வணிக மேலாண்மை, ஆசிரியர் பயிற்சி, அளவு கணக்கெடுப்பு, சிவில் பொறியியல், பராமரிப்பு என பல துறை சார்ந்து கல்வி பயின்ற மாணவர்கள் சுமார் 500 மேற்பட்டவர்கள் பட்டங்கள் பெற்றனர்
பிரதம விருந்தினராக மாலத்தீவு குடியரசைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மூத்த கல்வியாளர்,டாக்டர் மஹ்தி ஷாஹித், கலந்துகொண்டார் தலைமை விருந்தினராக திரு. யு.எம். மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் நலின் ஜெயமினி,மலேசியாவின் உயர் ஸ்தானிகர் திரு. முகமது டுமிங்கௌரவ விருந்தினர்களாக டாக்டர் முகமது ரபிக் (இந்தியா), தொழில் ஆலோசனை நிபுணர் சன்ஃபோ குளோபலின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் சர் தேசப்பிரியா எஸ். விஜேதுங்கே ஆகியோரும் இலங்கை ரூபவாஹினி கார்ப்பரேஷனின் செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான துணை இயக்குநர் திரு. யாகூப் உமர்லெப்பே மற்றும் ஜேஜே அறக்கட்டளையின் இயக்குநர் டாக்டர் I .Y .M . ஹனிஃப் போன்ற சிறப்பு விருந்தினர்களுடன் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்வு கல்வியின் சிறப்பு, தலைமைத்துவம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சக்திவாய்ந்த சான்றாக அமையும் பட்டதாரிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகவும், உலகளாவிய கல்வியில் இலங்கையின் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.