Date:

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பிணை..!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த மார்ச் 25 அன்று இலஞ்ச ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்ட வியாழேந்திரன், முதலில் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் அவரது விளக்கமறியல் காலம் இன்று (08) வரை நீடிக்கப்பட்டது.

இதே வழக்கில், கடந்த ஆண்டு வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது, விசாரணைகள் தொடரும் நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பத்தரமுல்லையில் ஓர் உல்லாசத் தீவு

பத்தரமுல்ல பகுதியில் ஒரு பெரிய பொது ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு வலயத்தை...

இலங்கை அணிக்கான வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் தீர்க்கமான ஒருநாள்...

ஹிஸ்புல்லாஹ்வின் 6 வழக்குகளும் தள்ளுபடி

ரீ.எல்.ஜவ்பர்கான் நிகழ்நிலை காப்புப் சட்டத்தின்கீழ் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற...

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பதுளை பொலிஸ் பிரிவின் குற்றத் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ்...