பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப் பட்டதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இம்மாதத்துக்கான முதலாவது பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்றிலிருந்து எதிர்வரும் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. இன்று ஏப்ரல் 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிமுதல் 10.00 மணிவரையில் நிலையியற் கட்டளை 22இல் குறிப்பிடப்பட்டுள்ள 01 முதல் 06 வரையான பாராளுமன்ற அலுவல்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணிமுதல் காலை 11.00 மணிவரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும் காலை 11.00 மணிமுதல் காலை 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2) கீழான கேள்விகளுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதி குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டமூலத் தின் இரண்டாவது மதிப்பீடு, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளை ஆகியவற்றின் விவாதத்துக்காக ஒதுக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்