குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறை தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.