பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல நீதிமன்றத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இப்போது அவர் வீடு திரும்பியுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.ஒவ்வொரு மாத இறுதியிலும் அவர் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிந்தது.
இஸ்ரேலுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.