பபுவா நியூகினியாவில், இன்று அதிகாலை 6:04 மணியளவில் 6.9 ரிக்டர் அளவு கொண்ட பயங்கர நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பபுவா நியூகினியான் மேற்கு நியூ பிரிட்டன் மாகாணத்தில் உள்ள கிம்பே (Kimbe) என்ற பகுதியிலிருந்து 194 கி.மீ (120 மைல்) கிழக்கு-தென்கிழக்கே சாலமன் கடலுக்கு அருகில் 33 கி.மீ ஆழத்தில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆழமற்ற நிலையில் ஏற்பட்டதால், அருகிலுள்ள பகுதிகளில் பலரும் அதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் கிம்பே பகுதியில் மிதமான அளவு அதிர்வை ஏற்படுத்தியிருக்கலாம் என்றாலும், பெரிய அளவு பாதிப்பு அல்லது சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு பபுவா நியூகினியாவின் புவியியல் அமைப்பு காரணமாக, இதுபோன்ற நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது இயல்பு. உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.