ஜப்பானின் மூன்றாவது பெரிய தீவான கியூஷு தீவுக்கு அருகில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
02ஆம் திகதி புதன்கிழமை இரவு 10.00 மணிக்கு ஜப்பான் நேரப்படி, காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கியூஷு தீவிலிருந்து சுமார் 40 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பிற சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லலை என ஜப்பானிய அரசாங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (28) மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் பல கட்டிடங்கள் தரைமட்டமாகி 2,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு ஜப்பானில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்து.