புதிய நீர் இணைப்புகளுக்கான ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை (NWSDB) அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கூற்றுப்படி, விண்ணப்பங்களை waterboard.lk வலைத்தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
அத்துடன், கோரிக்கை விடுக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் இணைப்புகள் வழங்கப்படும்.
இந்த முயற்சிக்கான ஒரு முன்னோடித் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
அடுத்த வாரத்திற்குள் புதிய இணைப்புகள் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.