கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ நேற்று (28) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட, கென்ட் வீதியில் அமைந்துள்ள ஒரு நிலம் தொடர்பான தகராறில் உரிமையாளரையும் அவரது மகளையும் அவமதித்து கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அரசாங்க அதிகாரிகள் குழுவுடன் சம்பந்தப்பட்ட நிலத்திற்குச் சென்றபோது, வீட்டு உரிமையாளரையும் அவரது மகளையும் மிரட்டியுள்ளார்.
அதன்படி, குறித்த சந்தேக நபரை இன்று (29) புதுகடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.