முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்தின் ஏற்பாட்டில், வருடாந்த இப்தார் நிகழ்வு புதன்கிழமை (26) திணைக்கள வளாகத்தில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மேல் மாகாண கௌரவ ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி சபாநாயகர் கௌரவ ரிஸ்வி சாலிஹ், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முழப்பர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
பௌத்த, கிறிஸ்தவ, இந்து திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் முன்னாள் பணிப்பாளர்கள், புத்த சாசன அமைச்சின் அதிகாரிகளும், இந்து, கிறிஸ்தவ திணைக்களத்தின் ஊழியர்கள்,பள்ளிவாசல் சம்மேளனங்களின் தலைவர்கள், சர்வ மதத் தலைவர்கள் என கலந்து கொண்டனர்.
திணைக்களத்தின் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும், விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் வரவேற்புரையை நிகழ்த்தியதோடு, பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ஆகியோரும் உரையாற்றினர்.
மௌலவி இர்ஷாத் ஹுமைதி விசேட உரை ஆற்றினார். நன்றி உரை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.என். பிர்னாஸ் நிகழ்த்தினார்.