ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ் நளீம், நேற்று (14), சபையில் பிரியாவிடை உரை நிகழ்த்திய பின்னர், செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவிடம், அவரது அலுவலகத்தில் வைத்து தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்தார்.
அதன் போது, கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.