Date:

சிறுவர்களிடையே பரவும் ஒருவகை நோய் ! இருவர் பலி

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருகிறது.

கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு , இருவர் உயிரிழந்துள்ளதாக சீமாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளின் கித்துல்வத்த தெரிவித்தார்.

மிஸ்-சி நோய் தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில்,

கொவிட் தொற்றின் பின்னர் சிறுவர்களுக்கு ஏற்படக் கூடிய பல உறுப்பு அழற்சி நோய் நிலைமை (மிஸ்-சி) ஏற்படும் வீதம் கடந்த ஒரு வார காலமாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது.

தற்போது கொழும்பு – சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 6 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதற்கமைய இதுவரையில் சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 78 சிகிச்சை பெற்றுள்ளதோடு , 150 க்கும் நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பல அறைகளில் இந்த நோயாளர்கள் உள்ளனர். கொழும்பில் மாத்திரமின்றி நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளிலும் இந்த நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 5 நாட்களில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் இருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர். இதுவே இந்நோயின் அபாய நிலைமை ஆகும்.

எனினும் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்கப் பெறாவிட்டால் நோயாளர்கள் உயிரிழக்க நேரிடும்.

எனவே இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணல் என்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.

கொவிட் வைரசுக்கு எதிராக எமது உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி , எமது உடற்பாகங்களுக்கு எதிராகவே செயற்படும் நிலைமை ஏற்படுகின்றமையே நோய் நிலைமை தீவிரமடையக் காரணமாகும். அதற்கமைய இதய தொகுதிக்கு எதிராக செயற்படும் போது , இதயத்திற்கான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படக் கூடும். கடந்த 5 நாட்களில் இரு சிறார்கள் உயிரிழந்தமைக்கு இதுவே காரணமாகும். எனவே இந்நோய் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோபா தவிசாளர் இராஜினாமா

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த சேனாரத்ன,...

சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை...

தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பாராளுமன்ற விவாதம்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஐக்கிய...

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...