இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறையடையவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணக்கம் வெளியிட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு சபையின் அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடர்வரையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதவியை பொறுப்பேற்பது தொடர்பில் ராகுல் ட்ராவிட் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டியின்போது, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைத் தலைவர் சவுரவ் கங்குலி (Sourav Ganguly) மற்றும் செயலாளர் ஜே ஷா (Jay Shah) ஆகியோர், ராகுல் ட்ராவிட்டுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை ஏற்க ராகுல் ட்ராவிட் இணங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.