சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில் இந்தியஅணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.242 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 42.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.