Date:

’’58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன’’

இலங்கையில் 58 பாதாள குழுக்கள் செயல்படுகின்றன. அந்த குற்ற வலையமைப்புக்குள் 1,400 பேர்வரை இடம்பெற்றுள்ளனர் என்று பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 5 கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 2024 ஆம் ஆண்டில் 75 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும், 18 வாள்வெட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. வெளிநாடுகளில் இருந்தே பாதாள குழுக்களை வழிநடத்துகின்றனர். வெளிநாடுகளில் உள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கை தொடர்கின்றது. பாதாள குழுக்களுக்கு தற்போது அரசியல் பாதுகாப்பு கிடைப்பதில்லை. பாதாள குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பிலுள்ள சிலரது ஒத்துழைப்பு நேரடியாக, மறைமுகமாக கிடைக்கப்பெறுகின்றது. அத்தகைய நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோதமாக புழங்கும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுவருகின்றன என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“PTA வர்த்தமானி அடுத்த மாதம் இரத்து”

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ஒழிப்பதற்கான வர்த்தமானி அடுத்த மாத தொடக்கத்தில்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.   அவர் இன்று (22) காலை...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்கவுக்கு தங்கம்

தென் கொரியாவில் நடைபெற்றுவரும் எறிதல் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (22) நடைபெற்ற...

அகில விராஜ் இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை...