கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிதாரி பயன்படுத்திய துப்பாக்கி, நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த வாழைத்தோட்ட பொலிஸார், நீதிமன்ற வளாகத்துக்குள் கடுமையான பாதுகாப்பை மேற்கொண்டு திடீர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.