மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழந்ததோடு, பலத்த காயமடைந்த மகள் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 39 வயதுடைய தந்தையும், 6 வயதுடைய மகளுமே உயிரிழந்ததாகவும், இவர்கள் இருவரும் கல்பொத்த வீதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக T56 ரக துப்பாக்கி பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.