முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (15) முற்பகல் ஓமான் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஓமானில் இடம்பெறவுள்ள இந்து சமூத்திர மாநாட்டில் சிறப்பு அதிதியாக ரணில் பங்கேற்பதுடன் இம்மாநாட்டில் விசேட உரையை நிகழ்த்தவுள்ளார்.
குறித்த மாநாட்டை இந்திய அறக்கட்டளை நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த மாநாட்டை தொடர்ந்து இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டு எதிர்வரும் புதன் (19) அன்று மீண்டும் நாடு திரும்புவார் என தகவல்கள் வௌியாகியுள்ளது.