அவுஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியது.
இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை ஏற்கெனவே வென்ற இலங்கை, கொழும்பில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியையும் வென்றமையைத் தொடர்ந்தே 2-0 என தொடரைக் கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 281/4 (50 ஓவ. ) (துடுப்பாட்டம்: குசல் மென்டிஸ் 101 (115), சரித் அசலங்க ஆ.இ 78 (66), நிஷான் மதுஷ்க 51 (70), ஜனித் லியனகே ஆ.இ 32 (21) ஓட்டங்கள். பந்துவீச்சு: ஷோன் அபொட் 1/41, பென் டுவார்ஷுஸ் 1/47, அடம் ஸாம்பா 1/47, ஆரோன் ஹார்டி 1/60)
அவுஸ்திரேலியா: 107/10 (24.2 ஓவ. ) (பந்துவீச்சு: டுனித் வெல்லலாகே 4/35, வனிது ஹசரங்க 3/23, அசித பெர்ணாண்டோ 3/23)
போட்டியின் நாயகன்: குசல் மென்டிஸ்
தொடரின் நாயகன்: சரித் அசலங்க