யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அலுவலகத்தைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.