கொழும்பு கல்வி வலயத்திலுள்ள 24,000 மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(15) முதல் ஆரம்பமாகவுள்ளதென கொழும்பு கல்வி வலய பணிப்பாளர் ஜீ.என்.சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, விவேகானந்தா தேர்ஸ்டன், விஷாகா, பெனடிக் ஆகிய கல்லூரிகளில் இந்த தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தின் சகல கல்வி வலயங்களிலும் இந்த முறை கல்விப் பொதுத்தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் செயற்பாடு இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.
தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டையை வைத்திருத்தல் அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.