படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சோனாலி சமரசிங்க, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தில் அமைச்சர் ஆலோசகராக நியமிக்கப்படுவார் என தெரிய வந்துள்ளது.
விக்கிரமதுங்க கொலை தொடர்பான குற்றச்சாட்டுகளில் இருந்து மூன்று சந்தேக நபர்களை விடுவிக்க சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்ததை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த முடிவால் அரசாங்கம் வெளிப்படையாகவே கோபமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.