Date:

”மக்கள் அவரை வீட்டை காலி செய்யக் கோரி கடிதம் அனுப்பலாம்”

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தை காலி செய்யுமாறு கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை மக்கள் அவரை வீட்டை காலி செய்யக் கேட்டு கடிதங்களை அனுப்பலாம்,” என்று அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் தனது நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக ஏன் முறையாகத் தெரிவிக்கவில்லை என ஊடகவியலாளர்கள் வினவிய போது அதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக கேட்டுக் கொண்டால், மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்யத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைக் குறிப்பிட்டு, ஒரு சட்டத்தரணியாக ராஜபக்ச நிலைமையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். “அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சவால் கடிதம் இல்லாமல் தனது வீட்டை காலி செய்ய முடியுமென்றால், மஹிந்த ஏன் அப்படி ஒரு கடிதத்திற்காகக் காத்திருக்கிறார்?” என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது துணைவியார் இருவருக்கும் பொருத்தமான மாற்று வீட்டை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி...

மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்சம் அல்லது...

டில்வினை சந்தித்தார் பிரான்ஸ் தூதுவர்

பிரான்ஸ் தூதுவர் ரெமி லெம்பர்ட் (Rémi Lambert)அவர்களுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்...

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள்

ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ்...