இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா காலமானார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று (29) அவர் காலமானார்.
கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்றிரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.