Date:

சமையல் எரிவாயுவின் விலை: தெற்காசியாவில் இலங்கை சாதனை

தெற்காசியாவிலுள்ள எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கான விற்பளை விலை இலங்கையிலேயே அதிகமாக உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

உலகச் சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும் புள்ளிவிவரங்களுக்கமைய, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற தெற்காசிய நாடுகளின் விலைகள் இலங்கையை விட குறைவாக உள்ளன.

பூட்டானிலும், உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை பூட்டான் நாணயமான 982 பிடிஎன் ஆகும். இதன் இலங்கை பெறுமதி 2,612.12 இலங்கை ரூபாயாகும்.

பங்களாதேஷில் 12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 5,917 டாக்கா என கூறப்படுகின்றது. அதன் இலங்கை பெறுமதி 1,381.69 ரூபாயாகும்.

தற்போது இந்தியாவில் 14.2 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 884 இந்திய ரூபாயாகும். அதன் இலங்கை பெறுமதி 2,352.77 ரூபாயாகும்.

லக்னோ நகரில் எரிவாயு சிலிண்டர் விலை 922.50 இந்திய ரூபாயாகும். அதன் இலங்கை பெறுமதி 2,453.85 ரூபாய் ஆகும்.

நேபாளத்தில் 14.2 கிலோ கிராம் சமையல் எரிவாயுவின் விலை 1,450 நேபாள ரூபாவாகும். அதன் இலங்கை பெறுமதி 2,407 ரூபாயாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

இன்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் புதல்வி சமித்ரிக்கு பிணை

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு...

ஈரானிலிருந்து வெளியேற அமெரிக்க பிரஜைகளுக்கு டிரம்ப் அறிவிப்பு

ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும்...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச...