Date:

கொழும்பு மாவட்டத்தில் மு.கா மரத்தில் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக,  “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) மாலை இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர், எம்.எஸ்.உதுமா லெப்பை, எம்.எஸ்.நழீம் உள்ளிட்ட கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில்  தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி  நீண்ட நேரமாக கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு, தெஹிவளை-கல்கிஸ்ஸ, கோட்டே, மொரட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொட்டிகாவத்தை, முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கு முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை மு.கா தலைவர் அறிவித்ததோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...