Date:

வௌ்ளைப்பூண்டு மோசடி – சதொச அதிகாரிகள் விளக்கமறியலில்

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நால்வரையும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தள நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த 4 சதொச அதிகாரிகள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கொள்வனவு தொடர்பான உதவி மேலாளர், சிரேஷ்ட விநியோக முகாமையாளர், விநியோக முகாமையாளர் மற்றும் வெலிசர மொத்த விற்பனை முகாமையாளர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்குவதற்காக சந்தேகநபர்கள் நேற்று வந்திருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

தடுப்புக் காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

நிதியியல் உலகில் பரபரப்பு : 150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? : பிளாக்ராக் நிறுவனம் அதிரடி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய்...

போரை முடிவுறுத்த 15 யோசனைகள் அடங்கிய ஆவணம் ஈரானுக்கு

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம்...

எரிபொருள் அதிகரிப்பால் விமான சேவைகளுக்கு பாதிப்பு

மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக விமான எரிபொருள் விலை அதிகரிப்பதைக்...