அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார்.
இதனால், அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அவர் இன்று திங்கட்கிழமை அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாகப் பதவியேற்க உள்ளார்.