Date:

புத்தர் வடிவிலான டொனால்டு டிரம்ப் சிலைகள்

அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப்பின் உருவத்தை புத்தர் போல உருவாக்கியுள்ளார் சீனாவைச் சேர்ந்த பீங்கான் உருவ வடிவமைப்பாளரும் சிற்பியுமான ஹாங் ஜின்ஷி. ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்கவுள்ள நிலையில், புத்தர் வடிவிலான டிரம்ப் சிலைகள் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

சீனக் கைவினைக் கலைஞர் ஹாங் ஜின்ஷியின் சிலைகள், 140 டொலர்கள் முதல் 2,700 டொலர்கள் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கலை மற்றும் அரசியலை இணைக்கும் இந்த பீங்கான் சிலைகள், உலகெங்கிலும் உள்ள சிலை சேகரிப்பாளர்களிடம் அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன.

999 முதல் 20,000 யுவான்களுக்கு அவற்றின் அளவைப் பொறுத்து விலை நிர்ணயம் செய்துள்ளார் ஹாங் ஜின்ஷி.முதன்முதலில் 2021 ஆம் ஆண்டில் ஈ-காமர்ஸ் தளமான டோபோவில் இது வைரலாக பரவியது. இந்த சிலைகள் அமேஸான் மற்றும் சீன இணையதள விற்பனை நிறுவனமான டெழுவில் விற்பனைக்கு உள்ளன.

இதுகுறித்து 47 வயதான ஹாங் ஜின்ஷி கூறுகையில்,

“தேர்தலில் அவர் வெற்றி பெற்ற பின்னாள்களில் நிறைய ஆர்வம் இருந்தது. முதலில் சிலைகளை நகைச்சுவைக்காக வடிவமைத்தேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான பீங்கான் சிலைகளை உருவாக்கியுள்ளேன். டிரம்பின் செயல் முறையும் புத்தர் சிலையின் வடிவமும் இரண்டு எதிரெதிர் வடிவங்கள் என்பதால் வாடிக்கையாளர்கள் புன்னகையுடன் வாங்கிச் செல்கின்றனர்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து டொனால்டு டிரம்ப் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முதலுதவி, பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல் தொடர்பான பயிற்சி

Michelin, இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை பொலிஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் முச்சக்கர...

முதன்முறையாக 3 இலட்சத்தை எட்டிய தங்கம் விலை

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3...

மைத்திரியும் புறப்பட்டார்

2025 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் (ரத்து...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ...