தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் உட்பட, இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.