Date:

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று பிரதமரை சந்திக்கின்றன

வேதன முரண்பாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய அலரிமாளிகையில் இன்று (12) மதியம் 12 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

அத்துடன்  ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவின் உறுப்பினர்களும் இன்றைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.

வேதன முரண்பாடு உள்ளிட்ட விடயங்களுக்குத் தீர்வு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள், 3 மாதகாலமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...