சீனாவில் பரவும் மெட்டாப்நியூமோவைரஸ் (எச்.எம்.பி.வி.) தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பாதிப்பு 13 ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு சிறுவர்களுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பரவி வரும் எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்றும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், தொற்று குறித்து பயப்படத் தேவை இல்லை எனவும், ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அவசியம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.