Date:

Online இல் வியாபாரம் செய்த முஹம்மட் நப்லான் மரணம்

அலைபேசி ஊடாக  online  வியாபார செயற்பாட்டில் ஈடுபட்டவர் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாய்ந்தமருது 11 உடையார் வீதியில் வசித்து வந்த முஹம்மட் நயீம் முஹம்மட் நப்லான் (வயது  20 ) என்ற  இளைஞனே  விரக்தி அடைந்த நிலையில் ஒரு வகையான மாத்திரைகள் உட்கொண்டு சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (05) மாலை மரணமடைந்துள்ளார்.

குறித்த மரணமடைந்தவரின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சவளக்கடை   பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.மேலும் மரணம் அடைந்த இளைஞன் சவளக்கடை பொலிஸ் பிரிவில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
மரணமடைந்த இளைஞரின் தந்தை தனது மகன் வெளிநாட்டில் தொழில் புரிவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொண்டதாகவும் அதற்காக அரிசி ஆலை ஒன்றில் கணக்காளராக சேர்த்ததாகவும் இதன்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான அலைபேசி   online ஊடாக  புதிய வகை வியாபார உத்திகள் உருவாக்கப்பட்டு   கொடுக்கல் வாங்கல்  இளைஞர் முதல் பல்வேறு தரப்பினரை இலக்கு வைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறித்த online  வியாபாரம் சட்டவிரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் அதில் ஆர்வம் கொண்டு பல இளைஞர்கள் முதல் பலர்  பங்கேற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு...