சந்தேகத்திற்கிடமான வெள்ளை வேன் தனது வீட்டின் பின்புறம் உள்ள வீதியில் கடந்த வியாழக்கிழமை காலை வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
வீட்டின் பின்பக்க வாசலுக்கு அருகே வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவர், கேட்டில் பதிக்கப்பட்ட எண்ணை சரிபார்த்து, இதுதான் வீடு என்று கூறியதாகவும், பக்கத்து வீட்டுக்காரர் அதைப் பார்த்து தனக்கு தகவல் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தனக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாக ஒரு மாதத்திற்கு முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்த போதிலும், இதுவரை அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.