Date:

எதிர்க்கட்சித் தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிடுகையில்,

நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட புது வருடத்தில் நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தைப் போல குறுகிய இன, மத கருத்துக்களால் பிளவுபட்ட அரசியல் திட்டங்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பது மிக முக்கியம். அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக நாட்டு மக்கள் எதிர்கொண்ட நிச்சயமற்ற தன்மை, ஏமாற்றங்களை முடிவுக்கு கொண்டுவந்து, மக்கள் தாய்நாட்டில் தங்கியிருக்க ஏதுவான பொருளாதார, அரசியல், சமூக சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதில் நாம் செய்ய வேண்டியது அமைதியின்மையை இல்லாதொழித்து நிம்மதியை வெற்றி பெறச்செய்வதற்கான பாதையை சரியாக தெளிவுபடுத்திக் கொள்வதாகும். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிதைந்துள்ள வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப புதிய பொருளாதார திட்டமும் செயல்முறையும் தேவை என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே நாட்டின் எதிர்காலத்திற்காக அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை வலுப்படுத்த புது வருடத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Power cut update:நாட்டின் பல பிரதேசங்களில் இருளில் மூழ்கிக் கொண்டு செல்கிறது

மோசமான காலநிலையால் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. ரண்தம்பே மற்றும் மஹியங்கனை...

அதிவேக வீதிகளில் கட்டணம் இன்றி பயணிக்க அனுமதி

தற்போது முதல் மறு அறிவித்தல் வரை அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க எந்தவித...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

வங்காள விரிகுடாவில் இலங்கை கடற்கரைக்கு அருகில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு...

மோசமான வானிலை – உயிரிழப்புகள் 47 ஆக அதிகரிப்பு!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக நேற்று (26) மற்றும் இன்று...