Date:

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2024 செப்டம்பர் 15, அன்று நடத்தப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் நேர்மையை மீறியதன் மூலம் மாணவர்கள்,   மற்றும் மனுதாரர்களின் அடிப்படை உரிமைகள் அரசால் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (31) அறிவித்தது.

மூன்று வினாக்களுக்கான விடைகளும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் தீர்மானம் சட்டவிரோதமானது என நீதியரசர்கள் யசந்த கோதாகொட, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் மேலும் அறிவித்தது.

அதன்படி, இப்பிரச்சினையில் நிபுணர்கள் குழு வழங்கிய பொருத்தமான பரிந்துரைகளில் ஒன்றைத் தொடருமாறும், அத்தகைய முடிவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், விடைத்தாள் மதிப்பீட்டை ஆரம்பித்து முடிப்பதற்கும், முடிவுகளை இறுதி செய்வதற்கும் உயர் நீதிமன்றம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.

மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுமாறும் தீர்ப்பளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி அன்பளிப்பு

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு 260 மில்லியன் டொலர் வருமானம்

இலவங்கப்பட்டை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த ஆண்டில் 260 மில்லியன்...

இந்துக் கல்லூரி கொழும்பு ஸ்ரீ வித்தக விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு திருவிழா

தலைநகரின் கல்விப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ள இந்துக் கல்லூரி...

2027 வரை சம்பள அதிகரிப்பு இல்லை

எவர் வேலை நிறுத்தம் செய்தாலோ அல்லது வீதியில் இறங்கினாலோ மூன்றாவது சம்பள...