Date:

இராணுவத்திற்கு 72 ஆண்டு நிறைவு ; 567 அதிகாரிகளுக்கு தரமுயர்வு

இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு தினத்தை  முன்னிட்டு 567 இராணுவ அதிகாரிகள் மற்றும் 10,369 படைவீரர்கள் தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரைக்கு அமைவாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (10) அனுஷ்டிக்கப்படுகின்றது.

இதற்கமைய, 8 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும்,17 கேர்ணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 42 லெப்டினன் கேர்ணல்கள் கேர்ணல் நிலைக்கும், 60 மேஜர்கள் லெப்டினன் கேர்ணல் நிலைக்கும், 256 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 10 லெப்டினன்ட்கள்  கெப்டன் நிலைக்கும், 2 ஆம் லெப்டினன்ட்கள் 152 பேர் லெப்டினன் நிலைக்கும், 22 கெடேட் நிலை அதிகாரிகள் லெப்டினன்ட்களமாகவும்  தரமுயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது.

விஷேடமாக பிரிகேடியர்களான பிரியந்த வீரசிங்க, அனில் இலங்ககோன், ரொபின் ஜயசூரிய,  சஞ்சய பெனாண்டோ, ரோஹித அலுவிஹார, தினேஷ் நாணயக்கார, லசந்த ரொட்ரிகோ மற்றும் சந்தன விக்ரமசிங்க ஆகியோரே மேஜர் ஜெனரலாக தரம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...