இனவாதத்தை பயன்படுத்துவதற்கும் இன்னுமொரு பேரழிவை ஏற்படுத்துவதற்கும் அரசாங்கத்திற்கு இன்னுமொரு பிரபாகரன் அல்லது சஹ்ரான் தேவைப்படுகின்றது என ஜேவிபியின் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தங்களின் தோல்விகளை மறைப்பதற்கும் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திருப்புவதற்கு அரசாங்கத்திற்கும் இவ்வாறான பேரழிவுகளை பயன்படுத்துவதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கும் சிறில்மத்தியு போன்று செயற்படும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கும் இவ்வாறான முயற்சிகள் மூலம் நாட்டிற்கு சாதகமான எதுவும் நடைபெறப்போவதில்லை என தெரிவிக்க விரும்புகின்றோம் என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கைகளை பின்பற்றாதவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு சிஐடியினரை பயன்படுத்துகின்றனர் எங்கள் கட்சி உறுப்பினர்களின் வீடுகளிற்கு சிஐடியினரை அனுப்பியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.