அடுத்த ஆண்டுக்கான புனித ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அரச ஹஜ் குழுவின் உறுப்பினராக எம்.எஸ்.எப் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியினால் கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் திக்வெல்லயினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது கொள்ளுப்பிட்டியில் வசித்து வருகின்றார். கணக்கீட்டு பட்டதாரியான இவர், பிரபல தொழிதிபருமாவார்.
றியாஸ் மிஹுலர் தலைமையிலான புதிய அரச ஹஜ் குழுவின் உறுப்பினர்களாக விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, சிரேஷ்ட சட்டத்தரணி டி.கே. அசூர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுல்லா முகாமைத்துவ பேரசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த ஹஜ் குழுவில் தொழிலதிபர் ஹக்கும் உள்வாங்கப்பட்டுள்ளார்.