Date:

அஷ்-ஷெய்க் காரி முகம்மத் சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு விஜயம்..!!

(எஸ். சினீஸ் கான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களது அழைப்பின் பேரில் சவூதி அரேபியாவில் புகழ்பெற்ற முக்கியமான இமாம்களில் ஒருவரான அஷ்ஷேய்க் காரி முகம்மது சஆத் நுமானி அவர்கள் காத்தான்குடிக்கு இன்று (27) வருகைதந்தார்.

காத்தான்குடி அல்-அக்ஸா பெரியபள்ளிவாயலில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் ஜும்ஆ பேருரை, தொழுகையினையும் நடத்தியதுடன் பல குரல்களில் அல்-குர்ஆனையும் ஓதிக்காட்டினார்.

அதனைத் தொடர்ந்து மஹ்ரிப் தொழுகையினை ஏறாவூர் பெரிய மீரா ஜும்ஆ பள்ளிவாயலிலும் இஷா தொழுகையினை வாழைச்சேனை முகைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் நடத்திவைத்தார்.

அஷ்ஷேய்க் முகம்மது சஆத் நுமானி சவூதி அரேபியா மக்கா ஹரம் ஷரீபின் தலைமை இமாமான அஷ்ஷேய்க் சுதைஷ் அவர்களது குரல் உட்பட பல்வேறுபட்ட இமாம்களின் குரல்களில் புனித அல்குர்ஆன் வசனங்களை ஓதக்கூடிய சிறந்த “காரியாக” திகழ்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புனித ரமழான் மாதம் நாளை ஆரம்பம்!

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்ட காரணத்தினால் புனித ரமழான் நோன்பு...

துறைமுக அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்

துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராகத் துறைசார் நிபுணரான கலாநிதி மஹிந்த பராக்கிரம...

அக்குரேகொட கொலை வழக்கு: சகோதரர்கள் விளக்கமறியலில்

அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை கொலை செய்வதற்கு உதவி ஒத்தாசை...

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்திரி விக்ரமசிங்க அவர்களுக்கு, இம்மாதம்...