Date:

கலவான விபத்தில் இளைஞன் பலி

கலவான-வட்டரவ வீதி வம்பியகொட பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் கலவான அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (26) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் கலவான குடுமிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ரம்பதிகே தினுல பன்சிலு என்ற 17 வயதுடைய இளைஞர் என கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனின் உறவினரும் தந்தையும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மெனிக் வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற ​பூப்புனித நீராட்டு  நிகழ்வொன்றில் கலந்து கொண்டு திரும்பி கொண்டிருந்த போதே  இந்த விபத்தில் சிக்கி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ID வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்: ஜனாதிபதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத்...

எதிர்பார்த்த வருமான இலக்கை எட்டிய சுங்கம்!

இலங்கை சுங்கத்தினால் இந்த ஆண்டுக்குள் ஈட்டவேண்டிய வருவாய் இலக்கை நேற்றைய (11)...

பிரசன்னவுக்கு பிணை

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12) கைது செய்யப்பட்ட முன்னாள்...

” SLPP எம்.பிக்கள் வாகனங்களை ஒப்படைக்க தயார்”

தனக்கும் தனது சக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற...