Date:

(video) கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது

அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது.

அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் மற்றும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள வரவு செலவு...

இஸ்ரேலில் இலங்கையர் இறந்து விட்டதாக அறிவிப்பு

இஸ்ரேலில் இலங்கையர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கான இலங்கை...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

அண்மையில் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண்...

இலங்கைக்கு கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...