சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று(09) இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிட்டிய தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலை நிர்ணயம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய தினம் நிறுவனத்தில் உள்ளக ரீதியாகக் கலந்துரையாடல்களை நடத்தி, இறுதி விலை தீர்மானிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
அந்த விலை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், கோதுமை மாவின் விலை அதிகரிப்பு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிப்பதாக ப்றீமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை, 15 முதல் 20 ரூபாவுக்கு இடையில் அதிகரிக்க அந்த நிறுவனம் தற்போது தீர்மானித்துள்ளது.