Date:

ஹட்டன் பஸ் விபத்து: அதிர்ச்சித் தகவல் வெளியானது

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் மல்லியப்பு பகுதியில் கடந்த 21ஆம் திகதி விபத்துக்குள்ளான நிலையில், குறித்த பஸ் இன்று நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டது.

குறித்த பரிசோதனையில், பஸ் சாரதியின் கதவு பூட்டு பழுதடைந்ததால், திடீரென கதவு திறந்ததால், சாரதி இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டது தெரியவந்தது.

ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய பிரதான மோட்டார் வாகன பரிசோதகரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பஸ் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸின் இருக்கைகள் தரமான முறையில் அமைக்கப்படாததால், அனைத்து இருக்கைகளும் கழன்று ஒன்றுடன் ஒன்று மோதி பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தரமற்ற நிலையில் இருந்த பஸ்ஸை இயக்க அனுமதித்த பஸ்ஸின் உரிமையாளருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புலனாய்வுத் தகவல் குறித்து வௌிப்படுத்திய ஜனாதிபதி!

முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது...

அருவக்காலு குப்பை திட்டத்துக்கு எதிரான புத்தளம் மாநகர சபையின் உறுதியான தீர்மானம்

புத்தளம் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அருவக்காலு தின்மக்கழிவு செயற்திட்டத்திற்கு...

மீண்டும் அதிகரித்து செல்லும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தொடர்ந்தும் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் இன்றும்...