Date:

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய கந்தசாமி குணரத்தினம் என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நேற்று (22) யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று (23)...

யாழ். சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது

வட மாகாணத்தின் முதலாவது சர்வதேச கிரிக்கெட் அரங்கின் கட்டுமானப் பணியானது தற்காலிகமாக...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு ஆபத்து

இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற நிலக்கரியை நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தில்...

கொழும்பு மாநகரசபை ஊழல்: பொதுமக்களிடம் உதவி கோரல்

2010ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர...