Date:

2021 அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் இருவருக்கு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு  ஊடகவியலாளர்களான மரியா ரெஸ்சா (பிலிப்பைன்ஸ்) மற்றும் திமித்ரி முராடோவ் (ரஷ்யா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மேற்படி  இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் உயரிய சாதனை புரிபவர்களுக்கு வருடாந்தம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

உலகளவில் மிகவும் கௌரவமிக்க விருதாக இது கருதப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வே நாட்டில் அறிவிக்கப்படும் அதேவேளை, ஏனைய விருதுகள், சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமில் அறிவிக்கப்படுகின்றன.
கடந்த 4 ஆம் திகதி ஆரம்பமான நோபல் பரிசு அறிவிப்புகள் எதிர்வரும் 11 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...

நாட்டில் ஏப்ரல் வரை எரிபொருளுக்கு பிரச்சினை இல்லை!

இந்த மாதத்திற்குள் இலங்கைக்கு வருமென உறுதிப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கப்பல்கள் மூலம், எதிர்வரும்...