Date:

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்..!

இலங்கையின் விருப்பத்திற்குரிய  பேஷன் வர்த்தக நாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வெற்றியை பதிவு செய்துள்ளது.

அதற்கமைய ‘Clothing & Accessories’ (ஆடை மற்றும் அணிகலன்கள்) மற்றும்  ‘Online Stores (Clothing) (ஆடைத் துறையிலான இணைய வர்த்தகம்) ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளில் இவ்வர்த்தக நாமம் மீண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளது:

இந்தச் சாதனையானது, ஒப்பிட முடியாத பேஷன் மற்றும் வாழ்க்கை முறை அனுபவங்களை வழங்குவதில் Fashion Bug நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

1994ஆம் ஆண்டு ஏழு பேர் கொண்ட குழுவின் மூலம் நிறுவப்பட்ட Fashion Bug நிறுவனம், தற்போது வளர்ச்சியடைந்து ஒரு முன்னணி பெயராக பரிணமித்துள்ளது. இந்நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் நாடு முழுவதும் 14 காட்சியறைகளைக் கொண்டுள்ளது.

உலகளாவிய ஸ்டைலான போக்குகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் அதே வேளையில், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட தொகுப்புகளை காட்சிப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பிரீமியம் ஆடை விற்பனையாளராக திகழ்வதில் இன்று இவ்வர்த்தக நாமம் பெருமை கொள்கிறது.

இந்த கௌரவிப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய Fashion Bug நிறுவனத்தின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சபீர் சுபாய ன், வாடிக்கையாளர்களுடனான பயணத்தை மேம்படுத்துவதில் வலுவான கவனத்தை செலுத்துவதே இவ்வர்த்தக நாமத்தின் வெற்றிக்குக் காரணம் என குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“Fashion Bug நிறுவனம் எனும் வகையில், நாம் மேற்கொள்ளும் அனைத்து விடயங்களிலும் வாடிக்கையாளர் பராமரிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே எமது இதயத்தில் உள்ள பிரதான விடயமாகும்.

சிறந்த வாடிக்கையாளர் சேவைக்கு முன்னுரிமை அளித்தல், ஒப்பிட முடியாத மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களை உருவாக்குதல் ஆகியன நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், நீண்ட கால விசுவாசத்தை பேணுவதற்கும், வர்த்தகநாமத்தின் பெயரை நிலைநிறுத்துவதற்கும் முக்கியமான விடயங்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

இது ஒவ்வொரு வாடிக்கையாளரினதும் எதிர்பார்ப்புடன் ஆழமாக எதிரொலிக்கிறது.” என்றார்.

தொடர்ச்சியான மேம்படுத்தல்களை உறுதி செய்யும் பொருட்டு, புகழ்பெற்ற நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து தொடர்ச்சியான பயிற்சித் திட்டங்கள், விசேட பயிற்சிப் பட்டறைகள், தொழில்முறை சார்ந்த மேம்பாட்டு பாடநெறிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் குறிப்பிடத்தக்க வகையிலான முதலீடுகளை Fashion Bug முன்னெடுத்துள்ளது.

ஊழியர்களின் விசேடத்துவத்தை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதில் இவ்வர்த்தகநாமம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. வாடிக்கையாளர் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், தமது விற்பனையாளர் குழுக்களுக்கு விற்பனைக் கொடுப்பனவுகளை வழங்கி ஊக்குவித்து, அதன் மூலம் அர்ப்பணிப்பையும், தொழில்முறை கலாசாரத்தையும் Fashion Bug வளர்க்கிறது.

அது மாத்திரமன்றி, வாடிக்கையாளர் வெகுமதித் திட்டம் (Loyalty Rewards) மூலம் பிரத்தியேகமான தள்ளுபடிகள் மற்றும் நன்மைகளையும் வழங்குவதன் மூலம் தமது விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு ஷொப்பிங் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.

2024 LMD வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் Fashion Bug நிறுவனத்திற்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரமானது, இலங்கையின் விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் அதன் பங்கை எடுத்துக்காட்டுகிறது.

எதிர்காலத்தை அடிப்படையாகக் கொண்டு, தரம் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாடு ஆகிய நெறிமுறைகளுக்கு உண்மையாக இருந்து, எதிர்காலத்திற்கு ஏற்ற போக்குடனான பேஷனை மையப்படுத்திய தெரிவுகளை வழங்குவதில் இவ்வர்த்தகநாமம் உறுதியாக உள்ளது.

ஷொப்பிங் அனுபவத்தை மேம்படுத்துவதில் கொண்டுள்ள தனது உறுதியான நோக்குடன், இலங்கையில் சில்லறை விற்பனைத் துறையின் விசேடத்துவத்தை Fashion Bug மீள்வரையறை செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

  யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன்...

இன்று இலங்கைக்கு வருகின்றார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...

தேசபந்துவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

விளக்கமறியலில் உள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை ஏப்ரல் 10ஆம் திகதி...

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373