2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரச தரப்பில் இணக்கம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று கூடியபோது, அண்மையில் அந்தக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது குறித்த தேர்தலைப் பழைய விகிதாசார முறைமையின் கீழ் நடத்துவதற்கான இணக்கத்தை பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியதாக, தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் அங்கத்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.