கஹட்டோவிட்ட wonder kids பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) அன்று Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் பிரதம ஆசிரியர் திருமதி Nafliya Ilham அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில் Wonder kids மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது திறன்களை வெளிக்காட்டியது வரவேற்கத்தக்கது.
மேலும் இவ்விளையாட்டுப் போட்டி Sun house ,Moon house என இரு இல்லங்களாக செயல்பட்டது இப்பாடசாலைக்கே உரிய தனிச்சிறப்பம்சமாகும் .
விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டு பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 📌 ஊடக அனுசரணை -CREATIVE MEDIA NETWORK