இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் திங்கட்கிழமை சந்தித்துப் பேசினர்.
இரு தலைவர்களும் ஒருவரையொருவர் அன்புடன் வரவேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முன்னதாக, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ராஜ்கோட்டில் மகாத்மா காந்தியின் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இதன்போது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்தார்.